^Back To Top

foto1 foto2 foto3 foto4 foto5
foto5
எமது பாடசாலையின் நூறாவது ஆண்டான 2023 இன் தொனிப்பொருளுக்கமைவாக “ஒன்று சேர்ந்து எழுந்திடுவோம்” (Let’s rise together )

பாடசாலைக் கீதம்

இராகம்: மோகனம்
தாளம்: ஆதி.
இயற்றியவர்: கி. நெல்லைநாதர் (ஆசிரியர்)
இசையமைப்பு: திருமதி சி. விஜயரட்ணம் (ஆசிரியர்)

 

வாழிய அராலி இந்துக்கல்லூரி
வாழிய வாழிய வாழியவே
வையகம் எங்கும் புகழ்ந்திட எங்கும்
வளர் கல்லூரி வாழியவே

ஈழமணித் திருநாட்டினில் எங்கும்
இலங்கிடும் கலைகள் ஓங்கும்
சூழிசைக் கழகம் இதுவே என்றும்
துலங்கிடும் கலையகம் இதுவே

செந்தமிழ் ஆங்கிலம் சேர்ந்து விளங்கும்
திருநிறைக் கழகமும் இதுவே
எந்தையர் அன்புடன் இனிதுற காத்து
ஏத்து கல்லூரி இதுவே

அழகுக் கலையும் மணியார் நெசவும்
அரு விஞ்ஞான கலையும்
உழவுக் கலையும் ஓங்க நல்கும்
உயர் கல்லூரி வாழியவே

திங்கள் போலத் திகழ்ந்திடக் கல்வி
செல்வமளித்திடும் தாயே
எங்கு சென்றாலும் எத்துயர் வரினும்
என்றும் நின்நலம் மறவோம்

இனிய நற்கலைகள் நல்குமராலி
இந்துக் கல்லூரி வாழ்க
இன்பமெ சூழ்ந்திட வாழ்க வாழ்க
எல்லோரும் வாழ்ந்திட வாழ்க வாழ்க …..

Copyright @ 2024  Araly Hindu College